எமனும் என்னவளும்
July 22, 2013
சித்திரகுப்தன் சுவடி கண்டு
உயிரைப் பறிக்க எமன் வர,
உயிர் பிழைக்க ஓடிச்சென்று
என்னவளின் அருகே நிற்க,
பின்னாலேயே வந்த எமன்
பார்த்தவுடனேயே குழப்பத்தில் ஓடிவிட்டான்!
என்னுயிரே ஈருயிராய்
அங்கிருப்பதைக் கண்டு!
என்னவளும் என் உயிராக!